யாருக்கோ ஏஜெண்டாக சில தற்குறிகள் அரசியல் நடத்துகின்றன - அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி..! - Seithipunal
Seithipunal


கடலூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பின் போது பெரியார் மற்றும் திராவிடம் குறித்து பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீமானின் இந்தப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 

இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:- "பெரியார் சொல்லாதவற்றையும் சொன்னதாக அபாண்டமாக அவதூறு பரப்புகிறார்கள். தமிழ்நாட்டை ஏன் பெரியார் மண் என்கிறோம் என சில மண்ணாந்தகைகளுக்கு புரிவதில்லை.

பெரியாரின் கொள்கைகளே தமிழ்நாட்டை இன்று வழிநடத்துவதால் பெரியார் மண் என்கிறோம். பெரியாரை விமர்சிக்கும் இழிவான, மலிவான அரசியல் பேர்வழிகளை புறக்கணிப்போம். அறிவிலிகளின் அவதூறுகளால் பெரியாரின் புகழை மறைக்க முடியாது. 

யாருக்கோ ஏஜெண்டாக சில தற்குறிகள் இங்கே அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றன. மானமும் அறிவும் இருப்போர் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள். தமிழ்நாட்டின் அமைதியை குலைக்க நினைத்தால் சட்டம் தன் கடைமையை செய்யும்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister duraimurugan speech about ntk leader seeman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->