அக்னிபத் திட்டம்.. ஒரே நாளில் 3 ஆயிரத்து 800 பேர் விண்ணப்பம்.!! - Seithipunal
Seithipunal


இந்திய ராணுவத்தில் அக்னி வீரர்கள் என்ற புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அக்னிபத் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகால ஒப்பந்தத்தில், ஆண்டுக்கு 50,000 வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பல மாநிலங்களில் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இத்திட்டத்தால் முப்படைகளில் உள்ள படைப்பிரிவுகளில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பின் இவர்களில் 25 சதவீதம் பேர் துணை ராணுவ படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி வீரர்களாக தேர்வு செய்யப்படுவோரில் 75 சதவீதம் பேருக்கு பணி பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய பலன்கள் இல்லை என்பதால் திட்டம் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இளைஞர்கள் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதனிடையே அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பதற்கான விண்ணப்பம் நேற்று முதல் தொடங்கியது. நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விண்ணப்பங்கள் நேற்று முதல் தொடங்கியது.

இந்நிலையில், அக்னிபத் இத்திட்டத்தின் மூலம் விமான படையில் சேர முதல் நாளில் 3 ஆயிரத்து 800 பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. பல்வேறு போராட்டங்களுக்கு நடுவே அக்னிபாத் திட்டத்தில் விமானப்படைக்கு ஆள் சேர்ப்பு பணி தொடங்கியது. தரைப்படைக்கு 40 ஆயிரம் வீரர்களும், விமானம் மற்றும் கடற்படைக்கு தலா 3 ஆயிரம் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3800 apply for agnipath job


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->