86 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் இளநிலை மற்றும் முதல்நிலை மருத்துவ படிப்புகளில் மொத்தம் 11 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில் அதில் மத்திய அரசு ஒதுக்கீட்டில் 1650க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவை மத்திய அரசு நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அவற்றில் தமிழகத்தில் மொத்தம் 86 இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.

ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு இடங்கள் இதுபோன்ற காலியாக இருப்பதால் அந்த இடங்களுக்கு மாணவர்களை கலந்தாய்வு மூலம் மாநில அரசுகளே நிரப்பிக் கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி கோரி இருந்தது.

இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு காலியாக உள்ள இடங்களை மாநில அரசுகளே கலந்தாய்வு மூலம் நிரப்பிக் கொள்ள அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 86 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

அதன்படி மத்திய அரசின் கீழ் உள்ள இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கி வரும் நவம்பர் 7ஆம் தேதி வரையும், மாநில அரசின் கீழ் உள்ள இடங்களுக்கு நவம்பர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரையும் கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவ சுகாதார இயக்குனரகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

86 MBBS seats counselling date notification


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->