ஜூன் மாதம் தொடங்குகிறது அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள்! தமிழக அரசு தகவல்.!
Academic year starts june
அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் ஜூன் மாதம் 20-ஆம் தேதி தொடங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவனையை பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுத் தேர்வுகள் முடிந்த பின்னர் அடுத்த கல்வி ஆண்டிற்காக, 1 ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழக்கமான வகுப்புகள் ஜூன் மாதம் 20-ஆம் தேதி தொடங்கும் என்றும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தற்போது முதல் பொதுத்தேர்வு வரை நடைபெறும் என்றும் மாணவர்கள் மகிழ்ச்சியாக படித்து தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
தேர்வு எழுதும் மாணவர்கள் அடுத்தவர் மகிழ்ச்சிக்காக தேர்வு எழுதாமல், தனக்காக மகிழ்ச்சியாக படித்து மன நிறைவோடு தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ், தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள நான் முதல்வன் கவுன்சிலிங் மூலமாக 9-ஆம் வகுப்பு முடித்து 10-ஆம் வகுப்பில் பிரிவுகளை தேர்ந்தெடுக்கும் வகையிலும், அவர்களின் திறைமையை மேம்படுத்த கவுன்சிலிங் வழங்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்குத் தேவையான கவுன்சிலிங் மையங்கள் விரைவில் அமைக்கப்பட விரைவில் அமைக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆண்டு பொதுத் தேர்வை மொத்தமாக 23 லட்சம் மாணவ மாணவிகள் எழுத இருப்பதாகவும், வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
English Summary
Academic year starts june