மாணவர்களின் கவனத்திற்கு.. இன்று முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து உயர் கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை http://tngasa.in, http://tngasa.org என்ற இணையதள முகவரியில் வருகின்ற ஜூலை 7ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக செலுத்தலாம். இணையதளம் வாயிலாக செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் The Director, Directorate of Collegiate Education, Chennai - 6 என்ற பெயரில் வருகின்ற 27ஆம் தேதி அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். 

மேலும் இது குறித்த தகவல்களுக்கு 044 - 28260098 / 28271911 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடர்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Apply to join govt arts and science colleges from today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->