நீட் தேர்வு வினாத்தாள் விவகாரம்: ஆதாரமற்ற குற்றச்சாட்டு - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து !
Cabinet Minister Dharmendra Pradhan Says About NEET Question Paper Leak
எம். பி. பி.எஸ் படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி நாடு முழுவதும் 4750 மையங்களில் நடைபெற்றது. மொத்தம் 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதினர். இந்த தேர்வின்போது கேள்வித்தாள் வெளியானதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 4ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் 67 மாணவர்கள் முதலிடம் பிடித்திருந்தனர். மேலும் சிலர் பெற்றிருந்த மதிப்பெண்களை எப்படி கணக்கிட்டாலும் அந்த மதிப்பெண் வராது என்று மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து சிலருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாக தேசிய தேர்வு முகவை கூறியது. இந்நிலையில் இன்று நீட் தேர்வை திரும்ப பெற வேண்டும் என்று மாநில அரசுகள் வலியுறுத்துவது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் கருணை மதிப்பெண் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டதோ அவர்கள் அனைவரும் மீண்டும் நீட் தேர்வினை எழுத வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேபினட் அமைச்சர் தர்மேந்திர பிரதான் " நீட் தேர்வின்போது கேள்வித்தாள் வெளியானதற்கான எந்த ஆதாரத்தையும் யாரும் சமர்ப்பிக்கவில்லை. ஏனெனில் கேள்வித்தாள் வெளியாகவே இல்லை.
தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 1560 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த ஆவன செய்யப்படும். அதற்கான கல்வியாளர் குழு வழிகாட்டுதலில் வெளிப்படையாக தேர்வு நடத்தப்படும்" என்று கேபினட் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
English Summary
Cabinet Minister Dharmendra Pradhan Says About NEET Question Paper Leak