எஸ்சி/எஸ்டி பிரிவைச் சார்ந்த மாணவர்கள் கவனத்திற்கு! அறிய வாய்ப்பு தவற விடாதீர்கள்! - Seithipunal
Seithipunal


எஸ்சி/எஸ்டி பிரிவைச் சார்ந்தவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யு.பி.எஸ்.சி-2025 தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் UPSC – 2025 தேர்வுக்கு
தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக டாக்டர்.அம்பேத்கார் அகாடமி மற்றும் சென்னையில் உள்ள முன்னனி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணக்கர்களுக்கு ஒரு வருட காலம் UPSC தேர்வுக்கான (பொது அறிவு மற்றும் விருப்ப பாடங்கள்) முதல் நிலை -முதன்மை நிலை பயிற்சியினை வழங்கவுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (UPSC) தேர்வுக்கு தேர்வு எழுத தகுதியான மாணக்கர்கள் Screening test மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களை நேர்மூகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு முதற்கட்டமாக தகுதியுள்ள 100 மாணக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியினை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 36 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், 

இப்பயிற்சிக்கான கால அளவு ஒரு வருடம் விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்யலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Civil Service SC ST Tahdco UPSC Exams


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->