இன்று முதல் பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு ஆரம்பம்.!
engineering counseling start from today
தமிழகத்தில் இயங்கி வரும் 476 பொறியியல் கல்லூரிகளில், பி.இ., பி.டெக்., உள்ளிட்ட படிப்புகளில் 2 லட்சத்து 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களில், தகுதியான 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 10-ந்தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதில், முதல்கட்டமாக, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
இந்த உள் ஒதுக்கீட்டில் மாணவர்கள் விருப்ப கல்லூரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்ய கால அவகாசம் வழங்கப்படும். இன்று இரவு 9 மணிக்கு, கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையும், நாளை மாலை 5 மணிக்குள் தற்காலிக ஒதுக்கீடு ஆணையை உறுதி செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இறுதி ஒதுக்கீடு ஆணை நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து வருகிற 25-ந்தேதி முதல் 28-ந்தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
English Summary
engineering counseling start from today