குரூப் 4 பதவி நியமன இரண்டாம் கட்ட கவுன்சிலிங் எப்போது? - Seithipunal
Seithipunal


டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி தமிழக அரசு துறைகளில் குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 10,292 இடங்களை நிரப்ப தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதற்கான முடிவு இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. இதில் வெற்றி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து அவை சரிபார்க்கப்பட்டு, கடந்த 20 ஆம் தேதி பணி நியமன கவுன்சிலிங் ஆரம்பமானது.

அதில் முதல் கட்டமாக 576 இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதற்காக மொத்தம் 8500 பேர் அழைக்கப்பட்ட நிலையில் நேற்று வரைக்கும் 5300 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் 400 இடங்கள் காலியாக உள்ளதால் கவுன்சிலிங் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் விரைவில் நடத்தப்பட உள்ளது. இது குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ள www. tnpsc.govt.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

group 4 appointment second counseling


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->