தனியார் நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க இளைஞர்களே.! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெற உள்ளது. 

ஒவ்வொரு மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில், தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. 

இந்த முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு. விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், அக்கவுண்டன்ட், மெக்கானிக் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர், 

பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என்று பல்வேறு கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என்று தனியார்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே, மேற்படி பணிகளுக்கு, தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும், வருகின்ற 19.07.2024 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்" என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job camp in dharmapuri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->