மாதம் 50000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.!
job vacancy in central government
மத்திய அரசின் இன்சூரன்ஸ் நிறுவனமான ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதற்கான தகுதிகள் குறித்து விரிவாக இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
வயது : குறைந்தபட்சம் 21 வயதும் அதிகபடியாக 30 வயதும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : விண்ணப்பத்தாரர்கள் சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது பிரிவு, மனித வளம், சட்டம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய பிரிவுகளில் விண்ணப்பம் செய்பவர்கள் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். நிதி பிரிவிற்கு விண்ணப்பம் செய்பவர்கள் முதுகலை, MBA/CFA / CA / CMA ஆகியற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : தேர்வு மற்றும் நேர்காணல்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://ibpsonline.ibps.in/gicionov24/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இந்த பணி குறித்த முழு விவரங்களை https://www.gicre.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
English Summary
job vacancy in central government