குலசை முத்தாரம்மன் கோவிலில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
job vacancy in kulasai mutharamman temple
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? எப்படி விண்ணப்பிப்பது? உள்ளிட்ட விவரங்களை காண்போம்.
பணியிடங்கள்:-
மெடிக்கல் ஆஃபிசர்
ஸ்டாப் நர்ஸ்
பல்நோக்கு சுகாதார பணியாளர்
கல்வித் தகுதி:
* மெடிக்கல் ஆபிசர் பணிக்கு எம்பிபிஎஸ் முடித்து இருக்க வேண்டும். TNMSE யில் பதிவு செய்து இருப்பது அவசியம்.
* ஸ்டாப் நர்ஸ் பணிக்கு பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ DGNM முடித்து இருக்க வேண்டும்.
* பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.
வயது வரம்பு :
மெடிக்கல் ஆஃபிசர், ஸ்டார் நர்ஸ் பணிக்கு 35 -வயது. பல்நோக்கு சுகதார பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை :
நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆகும்.
ஊதியம்:-
மெடிக்கல் ஆபிசர் பணிக்கு ரூ.60 ஆயிரமும், நர்ஸ் பணிக்கு ரூ.14 ஆயிரமும், சுகாதார பணியாளர் பணிக்கு ரூ.6 ஆயிரமும் வழங்கப்படும்.
விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் முத்தாரம்மன் திருக்கோவில் எங்கிற பெயரில் உள்ள பக்கத்தில் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை நிரப்பி தபால் மூலம், கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
செயல் அலுவலர்,
அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில்,
குலசேகரன்பட்டினம்,
திருச்செந்தூர் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் – 628206
விண்ணப்பம் வர வேண்டிய கடைசி நாள்;- 05.10.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
English Summary
job vacancy in kulasai mutharamman temple