சென்னை ஐஐடியில் வேலை செய்ய ஆர்வமா? - இதோ உங்களுக்காக.!
job vacansis in chennai IIT
சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான முழுவிவரம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
காலியிடங்கள் : சூப்பிரண்டிங் என்ஜினீயர், ஜூனியர் டெக்னீசியன்
கல்வி தகுதி : சூப்பிரண்டிங் என்ஜினீயர் பணிக்கு எம்இ, எம்டெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது சிஜிபிஏ (CGPA) உடன் குரூப் ஏ
ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளேமா என்ஜினீயரிங் அல்லது பிஎஸ்சி பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : சூப்பிரண்டிங் என்ஜினீயரிங் பணிக்கு 50 வயதுக்குள் இருக்க வேண்டும். ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம் : சூப்பிரண்டிங் என்ஜினீயர் பணிக்கு மாதம் ரூ.78,800 முதல் ரூ.2.09 லட்சம் வரை. ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் என்பது வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் https://recruit.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இப்படி விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, திறனறி/ட்ரேட் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
English Summary
job vacansis in chennai IIT