நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - எப்படி பதிவிறக்கம் செய்வது? - Seithipunal
Seithipunal


இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியான நிலையில், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

இந்தக் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

* தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nta.ac.in/ -க்குள் செல்லவும்.

* பின்னர் “NEET UG 2024 அட்மிட் கார்டு”க்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.

* அதில், உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு எண்ணை உள்ளிட வேண்டும்.

* உங்கள் உள்நுழைவுச் சான்றுகளைச் சமர்ப்பித்து அட்மிட் கார்டைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

* எதிர்கால குறிப்புக்காக இந்த அட்மிட் கார்டின் நகலை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* தேர்வு மையத்திற்கு செல்லுபடியாகும் புகைப்பட அடையாளச் சான்றிதழுடன் உங்கள் ஹால் டிக்கெட்டின் பிரிண்ட் அவுட்டை 
மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

* இந்த ஹால் டிக்கெட்டில், தேர்வரின் பெயர், தேர்வு எண், தேர்வு தேதி மற்றும் நேரம், தேர்வு மைய முகவரி, தேர்வு நாளுக்கான முக்கிய வழிமுறைகள் உள்ளிட்டவை இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

neet 2024 exam hall ticket released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->