ரத்து செய்யப் பட்ட UGC - NET தேர்வு.. மறு தேதி வெளியிட்ட NTA..!!
NTA Annouces Another Date For UGC - NET Exams
இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசியர்களாக பணிபுரிவதற்கான UGC - NET தேர்வு தேசிய தேர்வு முகமையால் ஆண்டு தோறும் நடத்தப் படும். இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இரு முறை கணினி வழியில் நடத்தப் படும்.
அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கான UGC - NET தேர்வு சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த தேர்வு நாடு முழுவதும் 317 நகரங்களில் சுமார் 1205 தேர்வு மையங்களில் நடைபெற்றது. மேலும் இந்த தேர்வை நாடு முழுவதும் 9 லட்சத்து 8 ஆயிரத்து 580 பேர் எழுதினர்.
ஆனால் தேர்வின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக தேர்வு நடந்த மறுநாளே NTA இந்த UGC - NET தேர்வை ரத்து செய்து அதிர்ச்சி அளித்தது. இதற்கான மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று NTA அறிவித்தது.
இந்நிலையில் தற்போது இந்த UGC - NET மறு தேர்வுக்கான தேதி வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி ரத்து செய்யப் பட்ட UGC - NET மறு தேர்வுகள் ஆகஸ்ட் 21 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் என்று NTA அறிவித்துள்ளது.
முன்னதாக ரத்து செய்யப் பட்ட தேர்வு எழுத்து தேர்வாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அறிவிக்கப் பட்டுள்ள மறு தேர்வுகள் கணினி வழியில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
English Summary
NTA Annouces Another Date For UGC - NET Exams