RTE : கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கட்டணமின்றி படிக்க கடும் போட்டி..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இந்த கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் முதல் ஏற்கப்பட்டன.

இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள சுயநிதிப் பள்ளிகளில் LKG மற்றும் 1ம் வகுப்பில் இலவசக் கல்வி பெற மொத்தமுள்ள 1 லட்சம் இடங்களுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து பள்ளிகளின் மொத்த இடங்களின் சதவீதத்தில் 25 சதவீத இடத்தை விட கூடுதலான விண்ணப்பங்களை பெற்ற பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அதில் ஒவ்வொரு மாணவரும் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள 4 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். 

இந்நிலையில் சென்னையில் இன்று 636 தனியார் பள்ளிகளில் குலுக்கல் மூலம் மாணவர்கள் கல்வி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி முதல்வர்கள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கூறுகையில், "சென்னையில் 636 தனியார் பள்ளிகளில் மொத்தம் 10,342 மாணவர்கள் இலவசக் கல்வி பெறுவதற்கு விண்ணப்பித்து கடும் போட்டி நிலவியது. மேலும் இது 25 சதவீத இட ஒதுக்கீட்டை விட அதிகமானதால், மாணவர்கள் அனைவர் முன்னிலையிலும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்" என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People rushed for free education in RTE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->