பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.! - Seithipunal
Seithipunal


பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். 

மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Application for Retotalling / Revaluation என்ற பக்கத்தை கிளிக் செய்து விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் அதனை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து உரிய கட்டணத்துடன் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மே 29 பிற்பகல் 1 மணி முதல் ஜூன் 1 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

மறுமதிப்பீடு செய்யும் மாணவர் பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505 ரூபாயும், மறுகூட்டலுக்கு-I, உயிரியல் பாடத்திற்கு ரூ.305 ரூபாயும் மற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும்- ரூ.205 ரூபாயும் செலுத்த வேண்டியுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

plus 2 students answer sheet download and apply re counting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->