மயிலாடுதுறையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்.! இளைஞர்களே ரெடியா.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 6 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தனியார்துறையில் வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் வருகிற 6 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு- தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

நடைபெறும் இடம்: மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப் வளாகம்.

இந்த முகாமில் மயிலாடுதுறை உட்பட பிற மாவட்டங்களிலிருந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. 

கல்வி தகுதி:

• 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர்

• டிப்ளமோ

• ஐ.டி.ஐ.

• கலை மற்றும் அறிவியல் பயின்ற பட்டதாரிகள் 

எனவே விருப்பமுள்ளகள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும் இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுனர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Private employment camp in Mayiladuthurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->