வழக்கறிஞர்கள் நீதிபதியாக 19 காலி பணியிடங்கள்.. "ஜூன்-3ல் முதல் நிலை தேர்வு".. தலைமை பதிவாளர் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் நேற்று சிவில் நீதிபதி பதவியில் 19 காலியிடங்கள் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "சிவில் நீதிபதிகள் பதவிக்கு வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 25 முதல் 35 வரையும், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 25 முதல் 40 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சட்டப் படிப்பை முடித்தவர்களாக இருந்தால் வயது 22 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். இந்த தேர்வுக்கு தேர்வுக்கட்டணமாக ரூ.2 ஆயிரம் நினைக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

முதல்நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நீதிபதிகளாக தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி முதல்நிலைத் தேர்வு வரும் ஜுன் 3-ம் தேதியும், முதன்மை எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 5 மற்றும் 6-ம் தேதியும், இறுதியாக நேர்காணல் அக்டோபர் 9-ம் தேதியும் நடைபெற உள்ளது. கல்வித் தகுதி, வயது வரம்பு உடையவர்கள் https://www.mhc.tn.gov.in மூலம் ஏப்.1-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்" என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Recruitment notification for civil judge


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->