#சேலம்:: மக்கள் நல்வாழ்வு சங்கத்தில் வேலை வாய்ப்பு.. 84 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!!
Salem district welfare society jobs 84 vacancy notification
சேலம் மாவட்டம் நகர்புற மருத்துவ நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவர்கள், பல்நோக்கு சுகாதார உதவியாளர் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த காலி பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக பணியிடங்களாகும். ஆர்வம் மற்றும் கல்வி தகுதி உள்ளவர்கள் வரும் மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தொகுப்பூதியமாக மருத்துவர் பதவிக்கு மாதம் ரூ. 60,000, பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பதவிக்கு மாதம் ரூ. 14,0000, உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ . 8,500 தொகுப்பூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை சேலம் மாவட்ட salem.nic.in இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்,
மாவட்ட நல்வாழ்வு சங்கம்,
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
பழைய நாட்டாண்மை கட்டட அலுவலகம்,
சேலம் மாவட்டம் - 636 001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் மார்ச் 10ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தேசிய நல்வாழ்வு குழுமம் (http://nhm.tn.gov.in/en) இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது சேலம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் அலுவலக நாட்களில் நேரில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Salem district welfare society jobs 84 vacancy notification