மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டால்... பல்கலைக்கழகம் அதிரடி எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


சென்னை, சீர்மிகு சட்ட பள்ளியில் பயிலும் மாணவர்கள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுவதாகவும் அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை கடுமையாகவும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. 

இது குறித்து பல்கலைக்கழகத்தின் முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் சீர்மிக்கு சட்ட பள்ளி சட்ட கல்வி தரத்திலும் மாணவர்கள் வருங்கால வழக்கறிஞர்களாகவும் நீதிபதிகளாகவும் மற்றும் பிற உயரிய பதவிகள் வகிப்பவர்கள் ஆகவும் உருவாகின்றனர். 

தேசிய அளவில் இயங்கி வரும் சட்டப் பள்ளிகளுக்கு இடையே இந்த சட்ட பல்கலைக்கழகம் முன்னுதாரணமாக செயல்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு ஊறுவிளைவிக்கும் விதமாக சில மாணவர்கள் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் சக மாணவர்கள் மீது உடல் ரீதியான தாக்குதலில் ஈடுபடுகின்றனர். 

தங்களுக்குள் தாக்கி கொள்வது, வெளியிலிருந்து வருபவர்களை தாக்குவது போன்றவையும் நடைபெற்று வருகிறது. இது சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதற்கு சமம் . சட்ட பல்கலைக்கழகம் என்ற முறையில் இந்த செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்.

இதுவரை இது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தற்காலிகமாக விளக்கி வைக்கப்பட்டனர். ஆனால் இத்தகைய செயல்பாடுகளில் இனிமேல் ஈடுபடும் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து விலகி வைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் சட்டப் பள்ளியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

students involved attack Law university alert


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->