உண்மை இது தான்!...மத்திய அரசு நிதி ஒதுக்கியது பெருமையல்ல?...பகிரங்கமாக போட்டுடைத்த அப்பாவு! - Seithipunal
Seithipunal


சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்காக நிதி ஒதுக்க கோரி பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்து வலியுறுத்தியதை அடுத்து, ரூ.63,236 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
 
இதற்கிடையே மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்காக நிதி ஒதுக்க கோரி தமிழக முதலமைச்சரைப் போல், தமிழக பா.ஜ.க. தலைவரும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்றும், அதனை தொடர்ந்து மத்திய அரசு நிதி ஒதுக்கியிருப்பதாகவும் தமிழக பா.ஜ.க. வழிகாட்டு குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மெட்ரோ பணிகளுக்கு நிதி முதலமைச்சரைப் போல், தமிழக பா.ஜ.க. தலைவரும் கடிதம் எழுதி இருந்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அப்பாவு, முதலமைச்சர் கேட்டதால் மத்திய அரசு நிதி கொடுத்தது என்று கூறுவதுதான் பெருமையே தவிர, கிளைச் செயலாளரோ, ஒன்றிய செயலாளரோ அல்லது மாவட்ட செயலாளரோ சொல்லி மத்திய அரசு நிதி கொடுத்தது என்று சொல்வது எந்த வகையிலும் பெருமையாகாது என்று கூறினார்.

மேலும் அரசு சார்ந்த விஷயமாக பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்ததாகவும், பின்னர் அமைச்சரவை கூடி இந்த முடிவினை முடிவு எடுத்ததாகவும், அதுதான் உண்மை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

This is the truth is not it proud that the central government has allocated funds dear father


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->