வரும் 15-ம் தேதி பாகிஸ்தான் செல்கிறார் மந்திரி ஜெய்சங்கர்! காரணம் இதுதானா?
External Affairs Minister Jaishankar to visit Pakistan to participate in Shanghai Cooperation Conference
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாடு பாகிஸ்தானில் அக்டோபர் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார்.
SCO மாநாட்டில் பொதுவாக உறுப்பினர் நாடுகளின் அதிபர்கள் அல்லது பிரதமர்கள் பங்கேற்பார்கள். ஆனால், இதற்கு முந்தைய ஆண்டுகளில், இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அல்லது பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
காஷ்மீர் பிரச்சனை மற்றும் பயங்கரவாதம் போன்ற முக்கியமான பிரச்சினைகள் உள்ள நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
2023-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த SCO மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
External Affairs Minister Jaishankar to visit Pakistan to participate in Shanghai Cooperation Conference