#JUSTIN | 11-ம் வகுப்பு ரிசல்ட்.. கோவை முதலிடம்.. பாடம் வாரியாக தேர்ச்சி எவ்வளவு.? முழுவதும் விவரம் உள்ளே.!!
Tamil Nadu 11th exam result full detail
தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை resultsdigilocker.gov.in , tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் 91.17% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தாண்டு மாணவர்களை விட மாணவிகள் 7.43% சதவிகிதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.69% மாணவிகளும், 87.26% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 96.02% பேர் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்தபடியாக 95.56% பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2-வது இடமும், 95.23% பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் 3-வது இடமும் பிடித்துள்ளது.
பாடம் வாரியான தேர்ச்சி சதவிகிதம்:
இயற்பியல் - 97.23%
வேதியியல் -96.20%
உயிரியல் -98.25%
கணிதம் -97.21%
தாவரவியல் -91.88%
விலங்கியல் -96.40%
கணினி அறிவியல் - 99.39%
வணிகவியல் - 92.45%
கணக்குப் பதிவியல் - 95.22%
வணிகவியல் - 86.93%
கலைப் பிரிவுகள்- 72.89%
தொழிற்பாடப் பிரிவுகள் - 78.72%
மேலும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.27% மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 8,221 மாற்றுத் திறனாளி மாணாவர்களில் 7,504 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோன்று தமிழ்நாட்டில் 90.90% சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.11-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 187 சிறைவாசிகளில் 170 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
Tamil Nadu 11th exam result full detail