தமிழ்கத்தில் பள்ளிகள் திறப்பு! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட பள்ளிகல்வித்துறை.!
Tamilnadu schools Opening guidelines issue
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொது தேர்வும் ஆண்டு இறுதித் தேர்வும் நிறைவடைந்து தற்போது கோடை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆடு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் திறக்கப்படுவது வழக்கம்.
சில நேரங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படும் பொழுது பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக்கும். நடப்பு ஆண்டில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் நான்காம் தேதி வெளியாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு ஜூன் இரண்டாவது வாரம் தள்ளி போக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதற்கிடையே பள்ளிகள் திறப்பதற்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கை குறித்தும் பள்ளிகள் திறந்த பிறகு கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் பள்ளிக்கல்வித்துறை அறிக்கை ஒன்றிய வெளியிட்டுள்ளது.
அதில், பள்ளிகளில் திறந்தவெளி கிணறுகள் இருக்கக் கூடாது. மின்சாதனப் பழுது இருந்தால் அதனை உடனடிகயாக சரிசெய்து விட வேண்டும். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மர கிளைகள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
வகுப்பறைகள் கற்றல் சூழலுக்கு ஏற்ப தயாராக இருக்க வேண்டும். பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கான பாட புத்தகங்களை வழங்கிட வேண்டும். மாணவர்களுக்கு ஆபத்து விளைவிக்க கூடிய பல்வேறு விஷயங்களை நுணுக்கமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Tamilnadu schools Opening guidelines issue