Dr அன்புமணி இராமதாஸ் வைத்த கோரிக்கை., சற்றுமுன் தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு.!
TET Exam Date Extend 2022
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. ஆனால், கடைசி ஒரு வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் பல்லாயிரக்கணக்கானவர்களால் விண்ணப்பம் செய்ய முடியவில்லை.
பி.எட் பட்டப்படிப்புக்கான முதலாமாண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் அவர்களாலும் விண்ணப்பிக்க முடியவில்லை. சர்வர் பிரச்சினை, கால அவகாசம் போதாமையால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை.
இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கையில், "கடந்த காலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 7 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்த நிலையில், இம்முறை சுமார் 4 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க வசதியாக நாளை 18-ஆம் தேதி முதல் இரு வாரம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க வருகின்ற ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
English Summary
TET Exam Date Extend 2022