சுயநலத்துக்காக அமைந்தது இந்தியா கூட்டணி.. மாயாவதி கடும் தாக்கு!
Indias alliance is for self-interest Mayawati slams me
இந்தியா’ கூட்டணிக்குஎதிர்காலம் இல்லை என்று , அது சுயநலத்துக்காக அமைந்த கூட்டணி என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது 69-வது பிறந்தநாளை நேற்று கட்சி தொண்டர்களுடன் கொண்டாடினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதன் பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டெல்லி சட்டசபை தேர்தல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு உள்ளிட்ட முறைகேடுகள் இல்லாமல் நேர்மையாக நடந்தால், அதன் முடிவுகள் ஆச்சரியம் அளிப்பதாக இருக்கும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி நல்ல வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மாயாவதி டெல்லியில் வசிக்கும் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்த மக்கள், கொரோனா சமயத்தில் பாரபட்சமாக நடத்தப்பட்டனர் என்றும் அதை மனதில் வைத்து அவர்கள் வாக்களிக்க வேண்டும் என கூறிய மாயாவதி 'இந்தியா' கூட்டணி, சுயநலத்துக்காக அமைந்த கூட்டணி என்றும் அதற்கு எதிர்காலம் இல்லை என்றும் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு மாற்று, எங்கள் கட்சிதான்' என கூறினார் இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Indias alliance is for self-interest Mayawati slams me