10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதியை அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு (2022-2023) பள்ளி மாணவர்களுக்கான 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். 

அதன்படி பத்தாம் வகுப்பிற்கான பொது தேர்வு ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மொழி பாட தேர்வு - 06/04/2023

ஆங்கில பாடத் தேர்வு - 10/04/2023

கணித பாடத் தேர்வு - 13/04/2023

இதர மொழி பாடத் தேர்வு - 15/04/2023

அறிவியல் பாடத் தேர்வு - 17/04/2023

சமூக அறிவியல் பாடத் தேர்வு - 20/04/2023

அதேபோல் 11ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5ம் தேதி முடிவடைகிறது.

மொழி பாட தேர்வு - 14/03/2023

ஆங்கில பாடத் தேர்வு - 16/03/2023

இயற்பியல், பொருளாதாரம் பாடத் தேர்வுகள் - 20/03/2023

உயிரியல்,தாவரவியல், வரலாறு பாடத் தேர்வுகள் - 24/03/2024 

வேதியியல், புவியியல், கணக்கியல் பாடத் தேர்வுகள் - 28/03/2023

கணினி அறிவியல், உயிர் வேதியல், புள்ளியியல் பாடத் தேர்வு - 30/03/2023

கணிதம்,விலங்கியல்,வணிகவியல் பாடத் தேர்வுகள் - 05/04/2023

அதே போன்று 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மொழி பாட தேர்வு - 13/03/2023

ஆங்கில பாடத் தேர்வு - 15/03/2023

கணினி அறிவியல், உயிர் வேதியல், புள்ளியல் பாடத் தேர்வுகள் - 17/03/2023

இயற்பியல், பொருளாதாரம் பாடத் தேர்வுகள் - 21/03/2024 

கணிதம், விலங்கியல், வணிகவியல் பாடத் தேர்வுகள் - 27/03/2023

உயிரியல், தாவரவியல், வரலாறு பாடத் தேர்வு - 31/03/2023

வேதியல், கணக்கியல், புவியியல், பாடத் தேர்வுகள் - 03/04/2023

அனைத்து பொது தேர்வுகளிலும் காலை 10:00 மணி முதல் 10:10 மணி வரை கேள்வித்தாள்களை மாணவர்கள் சரி பார்த்துக் கொள்ள நேரம் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து 10:00 மணி முதல் 10:15 மணி வரை மாணவர்களின் அடையாளம் சரிபார்ப்பு நடைபெறும். பின்னர் 10:15 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tn education department announced High school exam dates


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->