வேறலெவலில் மாறப்போகும் தமிழக அரசு பள்ளிகள்! அரசாணை பிறப்பித்த தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி, ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் 26 அரசு பள்ளிகளுக்கு ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சூரிய ஆற்றலின் உதவியுடன் மழை நீர் சேகரிப்பை நடைமுறைப்படுத்துதல், மக்கும் உரம் தயாரித்தல், காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பசுமைப் பணிகளை இப்பள்ளிகள் மேற்கொள்ளும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிகளின் அனைத்து மின்தேவைகளும் சூரிய ஆற்றல் உற்பத்தி மூலம் பெறப்படும் என்று தமிழக அரசு அந்த அரசாணையில் தெரிவித்துள்ளது.


மேலும் சில கல்வித்துறை செய்தி துளிகள்:

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத வைக்கும் பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Order Govt Green Schools


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->