685 அரசு ஓட்டுநர் காலி பணியிடங்கள்.. நாளை முதல் எப்படி விண்ணப்பிக்கலாம்.! தமிழக அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 ஓட்டுனர் உடன் நடத்துனர் (டிரைவர் கம் கண்டக்டர்) பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் அதாவது வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து நிரப்பிட அரசாணை வெளியிடப்பட்டது.

மேலும், ஓட்டுனர் உடன் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த போக்குவரத்துக் கழகங்களால் செய்தித்தாள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் போக்குவரத்து துறையில் ஓட்டுநர்கள் விண்ணப்பிப்பதுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் "அரச போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 685 ஓட்டுநர்களுடன் நடத்துனர்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 18.08.2023 அன்று www.arasubus.com என்ற இணையதளம் மூலம் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துனர் பதவிக்கு தகுதி உள்ளவர்கள் நிகழ்நிலையில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இப்பதவிக்கு 18.08.2023 மதியம் 1:00 மணி முதல் 18.09.2023 மதியம் 1:00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

மேற்படி நியமனம் தொடர்பான அனைத்து விவரங்களும் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்திலேயே பதிவிடப்பட்டுள்ளது. இப்பதிவிக்கான நியமனம் முற்றிலும் வெளிப்படை தன்மை உடையதாக இருக்கும் எனவும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும் என்றும், தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு ஓட்டுநருடன் நடத்துனர் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்" என செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt notification can apply govt driver posts from tomorrow


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->