#Bigbreaking:: 15,049 காலி பணியிடங்கள்..!! டி.ஆர்.பி தேர்வு அட்டவணை வெளியீடு...!! முழு விவரம் உள்ளே..!!
TNgovt Released TRP Exam Schedule for 2023
தமிழ்நாடு தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது டி.ஆர்.பி தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் டி.ஆர்.பி தேர்வு எழுதுகின்றனர். வரும் 2023 ஆம் ஆண்டில் நிரப்பக்கூடிய காலிப் பணியிடங்கள் குறித்தான முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
வரும் 2023 ஆம் ஆண்டு டெட் தகுதி தேர்வு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த டெட் தேர்வானது வரும் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய உதவி பேராசிரியர்கள் பணிக்கான 4,000 காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
இதை தவிர இரண்டாம் நிலை ஆசிரியர் பணிக்காக 6,553 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு 2023ம் ஆண்டு மே மாதம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் பணிக்காக 493 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் பணிக்காக 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 15,049 காலி பணியிடங்கள் இருப்பதற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் தற்போதைய நிலவரப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் பொழுது காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் தமிழ்நாடு தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
TNgovt Released TRP Exam Schedule for 2023