தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது.? இன்று வெளியாகும் அறிவிப்பு.!!
Today school reopen announcement
1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. கடந்த ஐந்தாம் தேதி முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டது. கோடை வெயிலின் தாக்கத்தால் தேர்வுகள் மட்டும் எழுதிய மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும், மற்ற நாட்களில் பல தேவையில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு கடந்த 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைவதால், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூலை 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இன்று முதல் ஜூலை 13ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட இருந்த நிலையில், பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும், வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெறும் என்பது பற்றியும் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Today school reopen announcement