அரசு ஆசிரியர் போட்டி தேர்வுக்கான தேதி மாற்றம்.. ! TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,600 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டி தேர்வு வரும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. இந்த தெரிவில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், தென் மாவட்டங்களில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் ஜனவரி 7ம் தேதி நடைபெற இருந்த போட்டித்தேர்வை பிப்ரவரி 4ம் தேதி நடத்தப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டுகளை பிப்ரவரியில் நடைபெறும் தேர்வுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TRB announced Govt teachers Competitive exam date changed


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->