காலைல வெறும் வயிற்றில்.. இதை குடிச்சா.. செம்ம பலன்.! - Seithipunal
Seithipunal


பார்லியை கொண்டு தயாரிக்கப்படும் இந்த கஞ்சி நம் உடல் ஆரோக்கியத்திற்கு  நன்மையை வழங்குவதோடு  சளி இருமல் சர்க்கரை நோய்  போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. இந்த கஞ்சியை எப்படி தயார் செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் 
பார்லி  - 1  கப் 
சீரகம்   - 1/2 ஸ்பூண் 
மிளகு  - 1/2 ஸ்பூண் 
பூண்டு  - 2  பல் 
தண்ணீர்  - 1 1/2  கப் 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பார்லி அரிசி சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் மிளகு  அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். இந்தப் பவுடரை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். இது குறைந்தது 15 நாட்களுக்கு வரும். பின்னர் இன்னொரு பாத்திரத்தில்  ஒன்றரைக் கப் தண்ணீர் ஊற்றி அதில் தோல் நீக்கிய இரண்டு பல் பூண்டை நன்றாக நறுக்கி போட்டு அதனுடன் அரைத்து வைத்த பார்லி பவுடரை ஒரு கப் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இது நன்றாக கொதித்த பின் இறக்கி வைத்து  சூடு ஆறியதும் பருககலாம்.

இந்த கஞ்சியின் நன்மைகள் :
 
இந்தக் கஞ்சியை பருகிவர சளி மற்றும் இருமலில் இருந்து விடுபடலாம். சிறிது நேரம் வேலை செய்தாலே மூச்சுரைப்பவர்கள் இந்த கஞ்சியை தொடர்ந்து பருகிவர நல்ல பலன் கிடைக்கும் . மேலும் இது உடல் சூட்டை தணிப்பதற்கு சிறந்த மருந்தாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amazing and healthy barley porridge receie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->