புற்றுநோய் செல்களை அழிக்கும் கருப்பு திராட்சை.! வேறென்னென்ன நோய்களை தீர்க்கும்?
benefits of black grapes
உலர் கருப்பு திராட்சையில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* உலர் கருப்பு திராட்சையில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதனால், மலச்சிக்கலில் இருந்து தீர்வு கிடைக்கும்.
* தினசரி இந்த உலர் திராட்சையை சாப்பிடுவதால், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் செரிமானக் கோளாறுகளான வாயு, நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண் உள்ளிட்டவற்றை சரி செய்யலாம்.
அதுமட்டுமல்லாமல், திராட்சையில் உள்ள அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், பெருங்குடல் அழற்சி, புற்று, தொற்று உள்ளிட்ட அபாயத்தை குறைக்கும்.
* வயதாகும் போது ஏற்படும் எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்புகளில் துளைகள் ஏற்படுவது ஆகியவற்றைத் தடுக்க, தினசரி கருப்பு உலர் திராட்சையை சாப்பிட்டு வரலாம்.
* இந்தக் கறுப்புத் திராட்சை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்குத் தேவையான வைட்டமின் சி உள்ளது. கண் மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகின்றன.
* கருப்பு திராட்சையில் நிறைந்துள்ள இரும்பு சத்து ரத்த சோகையை தடுக்க உதவுகிறது. ரத்த அழுத்த அளவை சீராக வைக்கிறது. கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கிறது. இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது.
* முக்கியமாக புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கிறது. வாயுத் தொந்தரவு ஏற்படாமல் இருக்க, கருப்பு நிற உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்த பின்பு சாப்பிட வேண்டும்.