பல நோய்களைத் தீர்க்கும் சின்ன வெங்காயம் - இதோ உங்களுக்காக.!
benefits of onion
சமையலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று சின்ன வெங்காயம். இந்த வெங்காயத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சின்ன வெங்காயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் வயிற்று புண் குணமாகும்.
* உடல் சூடு அதிகமுள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் குளிர்ச்சி அடையும். மன அழுத்தம், சோர்வு, பதட்டம் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.
* உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள அதிகபடியான கொழுப்பு கரையும். சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றை போக்க சின்ன வெங்காயம் பெரிதும் உதவுகிறது. மூட்டு வலி உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.