மருத்துவர்களுக்கான ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் பதிவு சாத்தியமில்லை - தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க தலைவர் திட்ட வட்டம்! - Seithipunal
Seithipunal


ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக், வருகையை பதிவு செய்யும் பயன்பாட்டுமுறை, அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைமுறைக்கு வர சாத்தியமில்லை என, தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் மருத்துவர் கே.செந்தில் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் முறையை, இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மற்றும், மருத்துவமனைகளிலும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) கட்டாயம் என அறிவித்துள்ளது. 

மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின், பேராசிரியர்கள், மருத்துவர்கள் வேலைக்கு வரும்போதும், வீட்டிற்கு திரும்பும் போதும், இந்த பயோமெட்ரிக் வருகைப் பதிவு மேற்கொள்ள வேண்டுமென என்எம்சி கூறியுள்ளது.அப்போதுபதிவாகும் வருகையின் விவரங்கள் அனைத்தையும் என்எம்சி நேரடியாக கண்காணிக்கும்‌.

இந்த பயோமெட்ரிக் வருகைப் பதிவை யாரும் முறையாக பின்பற்றாததால், சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்க என்எம்சி முடிவு செய்தது. மருத்துவக் கல்லூரி நிர்வாக தரப்பில் செய்யப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து,அந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்கின்ற எண்ணத்தை என்எம்சி கைவிட்டது.

இந்நிலையில், இந்த பயோமெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறை, மருத்துவர்களுக்கு இன்னும் கூடுதல் சுமையை தர வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதைப்பற்றி அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் கே.செந்தில் தெரிவித்ததாவது;

மருத்துவர்கள் யாரும் வேலை நேரத்தைக் கணக்கிட்டு வேலை செய்வதில்லை. கிட்டத்தட்ட 24 மணி நேரம்கூட உதவி ஆசிரியர்கள் சில சமயங்களில் வேலை செய்கின்றனர்.

இந்த பயோமெட்ரிக் வருகையை, நடைமுறை சிக்கல்களால் இருமுறை மேற்கொள்வதற்கு வாய்ப்பு குறைவு தான். தற்போதைக்கு மருத்துவர்கள் அனைவரையும் அவர்களின் வருகையை மட்டும் பதிவு செய்ய தெரிவித்துள்ளோம். வேலையிலிலிருந்து திரும்புவதை பதிவு செய்யுமாறு கூறவில்லை. இதுகுறித்து என்எம்சியின் விதிகள் மற்றும் விளக்கங்களைப் பெற்ற பிறகு அடுத்தகட்ட நகர்வு எடுக்கப்படும்” என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biometric registration linked to Aadhaar is not possible Tamil Nadu Government Doctors Association opinion


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->