இந்தியாவில் மாரடைப்பு குறித்து மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் 28.1% பேர் மாரடைப்பால் மரணமடைவதாக மாநிலங்களவையில் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஐ.சி.எம்.ஆர் ஆய்வு அறிக்கைகளின் படி, இந்தியாவில் 1990ல் மாரடைப்பால் இறப்போர் 15.2%ஆக இருந்த நிலையில் 2023ல் 28.1%ஆக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. 

2017-18ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி, தினசரி புகை பிடிப்பவர்களில் 32.8% பேருக்கும், மதுப் பழக்கம் உள்ளவர்களில் 15.9% பேருக்கும், போதிய உடல் உழைப்பு இல்லாத 41.3% பேருக்கும் மாரடைப்பு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போதுமான காய்கறிகள் மற்றும் பழங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளாத 98.4% பேருக்கும் இருதய நோய் ஏற்படலாம் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. 

சமீப காலமாக அதிகபடியான மாரடைப்பு இறப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில், கொரோனா காலத்திற்கு பிறகு மாரடைப்பு இறப்புகள் அதிகரித்திருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் மாரடைப்பால் இறப்போர் விகிதம் உயரலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central minister release date of heart attack dead in India


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->