கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி நாளை அறிமுகம்! - Seithipunal
Seithipunal


பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்காக மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசி நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனம் இணைந்து பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளது.

இது தொடர்பாக பேசிய நீதி ஆயோக்கின் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா தெரிவித்ததாவது,

"இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்காக தடுப்பூசி உருவாக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. இதனை அறிமுகம் செய்வது மகிழ்ச்சியான அனுபவம். இதன் மூலம் நமது மகள்களும், பெண்களும் மகிழ்ச்சி அடைவார்கள். நீண்ட நாள்களாக காத்திருந்த தடுப்பூசி அவர்களுக்கு கிடைக்கவுள்ளது.

85 முதல் 90 சதவிகிதம் பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இது குறிப்பிட்ட நுண்கிருமியால் ஏற்படுகிறது. இந்த புதிய தடுப்பூசி கொண்டு அந்த நுண் கிருமிதொற்று ஏற்படாமல் தடுக்க முடியும். இதுவரை அறிமுகம் செய்யப்பட்ட தடுப்பூசி தேவைகளிலேயே இது மிகப்பெரியது". என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cervical cancer vaccine introduced tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->