இளநீர் குளிர்ச்சிக்காக மட்டுமல்ல.. இவ்வளவு நன்மைகள் உள்ளதா.?! - Seithipunal
Seithipunal


கோடை காலம் என்றாலே தாகத்தை தணிக்க கூடிய இளநீர் அத்தியாவசியமாகிவிடும். இது வெறும் தாகம் தணிக்க மட்டும் பயன்படுவது இல்லை. 

நிறைய மருத்துவ குணங்கள், சத்துக்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. இப்படிப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த இளநீரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

இளநீரில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் சோடியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன. இதை வெயில் காலங்களில் குடிப்பதால் உடல் சூடு தணிந்து புத்துணர்ச்சி கிடைக்கும். 

 

வயிற்றுப் புண்களை குணப்படுத்த அன்றாடம் ஒரு இளநீர் குடிக்கலாம். உடலில் ஏற்படும் வறட்சியை போக்கி முக அழகை மேம்படுத்துவதிலும், முகப்பருக்கள் வராமல் தடுப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. 

கோடை காலத்தில் ஏற்படும் சிறுநீர் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் இளநீர் தீர்க்கும். இதில், லாரிக் அமிலம் இருப்பதால் வறட்சியினால் தோல் சுருக்கம் ஏற்படாமல் காக்கிறது.

அன்றாடம் இளநீர் குடிப்பது உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றி உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coconut water For health benefits


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->