EWC Vs IWC எது சிறந்தது?..!
Comparison and Health Tips of European Water Closet EWC Vs Indian Water Closet IWC
தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான இல்லங்களில் விழிப்புணர்வு காரணமாக கழிவறைகள் கட்டப்பட்டு வரும் நிலையில், இவைகளில் Indian Water Closet என்று அழைக்கப்படும் IWC வகையிலான கழிவறைகள் அமைக்கப்படுவதில்லை. மாற்றாக European Water Closet என்று அழைக்கப்படும் EWC வகையிலான கழிவறைகள் மட்டுமே உள்ளது.
இவ்வாறு இல்லங்களில் உட்காரும் வகையில் அமைக்கப்படும் கழிவறைகள் குறித்து கேட்டால், இவை பெரியவர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும் என்று, வீட்டில் பெரியவர்களை வைத்துக்கொள்ளாத நபர்கள் தெரிவிப்பார்கள். மேலை நாடுகளின் யுக்தியை பின்பற்றுகிறோம் என்ற பெயரில், விபரீதத்தை அறியாமல் இவற்றை செய்து வருகின்றனர்.
அறிவியல் ரீதியாக நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவில், மனித கழிவுகளை வெளியேற்றும் போது மேற்கத்திய கழிவறைகளில் உள்ள முறைகள் தவறானது என்றும், உடல் கழிவுகளை அவை வெளியேற்றாமல் மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் மலச்சிக்கலால் ஏற்படும் பிற பாதிப்புகளை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் வயதான காலங்களில் கஷ்டப்படுவார்கள் என்று எண்ணி EWC கழிவறைகளை அமைப்பது பிரச்சனை இல்லை.
ஆனால், கலாச்சாரம் மற்றும் வசதி என்ற பெயரில் IWC என்ற இந்திய பாரம்பரிய கழிவறை முறைகளை மறந்து வருவதே பெரும் சோகம். இந்திய IWC முறைகள் மூலமாக வயிறில் உள்ள மலக்கழிவுகள் அனைத்தும் முழுவதுமாக வெளியேற்றப்படும். ஆனால், EWC யில் மூக்கினால் மட்டுமே வெளியேற்றப்படும். இதில், நமது உடலில் மலங்கள் தேவையில்லாமல் தாங்கிக்கொள்ளும் சூழலும் ஏற்படுகிறது. EWC கழிவறைகளை சரியாக பயன்படுத்தாத பட்சத்தில் சுகாதார சீர்கேடும், உயிருக்கும் கேடு ஏற்படும்.
அவ்வாறு வீட்டில் வயதானவர்கள் இருக்கும் பட்சத்தில், அவர்களின் வசதிக்காக EWC கழிவறைகளை அமைத்தாலும், IWC கழிவறைகளையும் அமைத்திருக்க வேண்டும். இதுவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
Tamil online news Today News in Tamil
English Summary
Comparison and Health Tips of European Water Closet EWC Vs Indian Water Closet IWC