நாம் மறந்து போன சைக்கிளிங்கில்.. இவ்வளவு விஷயம் இருக்கா.?! ஆயுளை அதிகரிக்க அற்புத வழி.!  - Seithipunal
Seithipunal


அன்றாடம் அரை மணி நேரமாவது சைக்கிள் ஓட்டுவது நம் உடலில் பல்வேறு நலனை கொடுக்கிறது. வெகுதூரத்திற்கு செல்லவும், மேடு பள்ளங்களை கடக்கவும் ஒத்தையடி பாதையில் தடுமாற்றம் இல்லாமல் போகவும் நமக்கு உதவியது சைக்கிள்தான்.

 உடலை ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள உடற்பயிற்சி தொடர்ந்து செய்வது அவசியம். இந்த உடற்பயிற்சிக்கு பலராலும் உடலையும் மனதையும் அன்றாடம் பழக்குவது கடினமானதாக இருக்கும். ஆனால் அன்றாடம் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டுவது அவ்வளவு பெரிய கடினமான விஷயமாக இருக்காது. எனவே கஷ்டப்பட்டு ஜிம்மிற்க்கு சென்றோ அல்லது மாங்கு மாங்கு என்றோ உடற்பயிற்சி செய்வதை விட்டுவிட்டு சைக்கிள் ஓட்டினாலே போதும் இது நமது உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆரோக்கிய பலன்களை அள்ளிக் கொடுக்கிறது.

அன்றாடம் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டுவது 300 கலோரி கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. முதலில் 10 நிமிடங்களுக்கு சைக்கிள் ஓட்ட ஆரம்பித்து அடுத்தடுத்து 20, 30 என்று ஒரு நாளுக்கு அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டுவது நல்லது.

இது நம் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றும். அத்துடன் இது மொத்த உறுப்பையும் இயங்க வைப்பதால் கால்கள், மூட்டுகள் வலுவடையும்.

உடல் பருமன் பிரச்சனைகளும் இருக்காது. கொழுப்பு குறைந்து உடல் எடை கட்டுக்குள் இருக்கும். இதனால் மனமும் மகிழ்ச்சியுடன் இருக்கும். சமீபத்தில் நெதர்லாந்தில் உள்ள உட்ரெச் பல்கலைக்கழக ஆய்வில் ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டுவது நம் ஆயுளை அதிகரிக்க உதவும் என்பது தெரியவந்துள்ளது. உடற்பயிற்சி செய்தாலே நமக்கு மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கக்கூடும். 

இப்படி சைக்கிள் ஓட்டுவதால் மனதில் சந்தோஷ ஹார்மோன்கள் தாறுமாறாக ஏற்படும். இதனால் மன அழுத்தம் மன சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எளிதாக சமாளிக்க முடியும். இது மலச்சிக்கல், குடல் இயக்க பிரச்சனைகள் உள்ளிட்டவற்றையும் போக்குகிறது. மேலும், உடல் தோற்றத்தில் கம்பீரத்தையும், அழகையும் ஏற்படுத்தக் கூடியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cycling benefits in Tamil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->