மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.... சோனியா காந்தி நலவிரும்பிகள் மகிழ்ச்சி!!!
Discharged from the hospital Sonia Gandhi s well wishers are happy
புதுடெல்லி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார். இவருக்கு 78 வயது ஆகிறது . இவர் சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினையின் காரணமாக அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவரின் உடல் நிலையை அவ்வப்போது மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பிலிருந்து நேற்று தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் நல விரும்பிகள்:
இந்நிலையில் சர் கங்காராம் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சோனியா காந்தி நலமுடன் வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தியை கேட்ட காங்கிரஸ் சோனியா காந்தி நல விரும்பிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
English Summary
Discharged from the hospital Sonia Gandhi s well wishers are happy