தைராய்டு நோயால் அவதிப்படுறீங்களா.? இந்த உணவுகளை ட்ரை பண்ணி பாருங்க! - Seithipunal
Seithipunal


தைராய்டு சுரப்பி நம் உடலிலிருக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு நாளமில்லா சுரப்பியாகும். இந்த சுரப்பியானது உடலின் வளர்ச்சியை மாற்றங்களை கட்டுப்படுத்தக்கூடியது. நம் தொண்டை குரல்வளையின் இருபுறங்களும் வளைந்திருக்கும் இந்த நாளமில்லா சுரப்பிகள் குழந்தையின் கரு உருவாக்கத்திலிருந்து உடல் வளர்ச்சி தசை வளர்ச்சி மூளை வளர்ச்சி என ஒவ்வொரு வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வைக்கிறது.

தைராய்டு பிரச்சனை பொதுவாக அயோடின் சத்து குறைபாடு காரணமாகவும் பரம்பரையின் அடிப்படையிலும் வரக்கூடிய ஒரு நோயாகும். மேலும் அதிக உடல் பருமன், ஊட்டச்சத்தில்லாத உணவு முறை காரணமாகியவற்றாலும் தைராய்டு நோய் ஏற்படும். இவற்றை சரி செய்வதற்கு என்ன மாதிரியான உணவு  பழக்கங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று பார்ப்போம்.

தைராய்டு ஹார்மோன் சீரற்ற நிலையிலிருப்பவர்கள் ஆப்பிள் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் அதிகளவிலான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. 

மேலும் ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த பெரி பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலமும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் அருந்தி வருவதன் மூலமும் தைராய்டு நோயை கட்டுப்படுத்தலாம்.

செலினியம் அதிகமாக உள்ள காளான்  மற்றும் பூண்டு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். 

பசலை கீரையில் எண்ணற்ற அமினா அமிலங்களும், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளன. தைராய்ட் இருப்பவர்கள் இந்தக் கீரையை உணவில் தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் புரதச்சத்துக்கள் என்ற இந்த முட்டை, தானியங்கள, கடல் உணவுகள்  போன்றவற்றையும் நம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவற்றில் இருக்கக்கூடிய ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நம் உடலிலிருக்கும் தைராய்டு சுரப்பியின் மாற்றங்களை கட்டுப்படுத்தும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

foods that can control hyroid issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->