10 நிமிடத்தில்.. கிராம்பை வைத்து.. தலைமுடியை வளர்க்கும் அற்புத ரகசியம்.!  - Seithipunal
Seithipunal


நாம் சமையலுக்கு பயன்படுத்துகின்ற கிராம்பு நம் தலை முடியை வளர்க்க பயன்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மைதான். கிராம்பு நீரை வைத்து தலை முடியை வளர்க்க எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

* கருவேப்பிலை 8 முதல் 10 வரை எடுத்துக் கொள்ளவும்.
* தண்ணீர் இரண்டு கப்
* கிராம்பு பத்து முதல் 12 வரை.


செய்முறை:

ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்தவுடன் அதில் கிராம்பு மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும். இந்த தண்ணீரை நன்றாக கொதிக்க விடவும்.

அதிலிருந்து கிராம்பு மற்றும் கருவேப்பிலை வாசனை கிளம்பும். அந்த வாசனை வந்த ஐந்து நிமிடத்திற்கு பின் கேஸ் அணைத்துவிட்டு கொதிக்க வைத்த நீரை நன்றாக ஆற விடவும்.

இந்த நீரை நன்றாக குளிர்வித்து அதன் பின் தலைக்கு தேய்த்து கொள்ளலாம். இதை தலைக்கு தேய்ப்பதற்கு முன்பாக ஷாம்பு வால் தலை முடியை நன்றாக கழுவிக் கொள்ளவும். 

அதன் பின் இந்த கிராம தண்ணீரை தலையில் தேய்த்து அப்படியே ஊற விடவும். விடுமுறை நாட்களில் இதை பயன்படுத்துவது நல்லது. தலைமுடியில் தடவி விட்டு அதன் பின் அப்படியே விட்டுவிடலாம். சிலருக்கு அந்த வாசனை பிடிக்கவில்லை என்றால் நான்கு முதல் ஐந்து மணி நேரத்திற்கு பின்னர் வெறும் தண்ணீரை மட்டும் ஊற்றி கழுவி விடலாம். 

எந்த காரணத்தை கொண்டும் ஷாம்பு பயன்படுத்தக் கூடாது. அப்படி கிராம்பு தண்ணீரை பயன்படுத்திய பின் ஷாம்பு பயன்படுத்தும் போது அதற்கான பலன் கிடைக்காமல் போகலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girambu water For hair Growth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->