கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தை கூட விரும்பி சாப்பிடும்... இப்படி செஞ்சு குடுங்க 'முருங்கைக் கீரை சாதம்' ..!!
Healthy Murungai Keerai Saadham Recipe
சாதாரணமாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும் முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இந்த முருங்கைக் கீரையில் சாதம் செய்து கீரை விரும்பாத குழந்தைகளையும் கீரை சாப்பிட வைக்கலாம். அதன் செய்முறையை இங்கு பார்ப்போம்.
முருங்கைக் கீரை சாதம் செய்வது எப்படி?
* முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து, பின்னர் காய்ந்த மிளகாய் 4, கருவேப்பிலை சிறிதளவு, நறுக்கிய சின்ன வெங்காயம் சிறிதளவு, மற்றும் 1 சிட்டிகை பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
* பின்னர் அதில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 2 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கி , அதில் 1 கப் புளி தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.
* அடுத்து அதில் 1 கப் ஊறவைத்த அரிசியை சேர்த்து, 1 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி வேக வைக்க வேண்டும்.
* இதில் கழுவி சுத்தம் செய்த முருங்கைக் கீரையை சேர்த்து நன்கு கிளறி, பின்னர் ஒரு தட்டு கொண்டு கடாயை மூடி, அடுப்பை குறைந்த தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின்னர் சிறிது நேரம் கழித்து, மூடியைத் திறந்து கிளறிய சாத கலவையில் 1 ஸ்பூன் நெய் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி தூவ வேண்டும். சத்தான முருங்கைக் கீரை சாதம் தயார்.
English Summary
Healthy Murungai Keerai Saadham Recipe