அதிக புரோட்டின் ஆபத்தா.? டயட் எடுப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.! - Seithipunal
Seithipunal


நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தசைகளின் வளர்ச்சிக்கு புரதம் மிக அவசியமானது. சிலர் தசை வளர்ச்சிக்காக அதிகப்படியான புரதத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடும். 

அதிக புரதச்சத்து அதிகப்படியான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். புரோட்டின் தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு இதய பிரச்சினைகள் வரும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதய நோயாளிகள் அதிக புரோட்டின் சாப்பிடக்கூடாது. இது சிறுநீரகத்திற்கும் நல்லது இல்லை. 

உடலில் புரதத்தின் அளவு அதிகமாக இருந்தால் சிறுநீரகமானது நைட்ரஜனை விரைவாக வெளியேற்ற முடியாமல் அவஸ்தைப்படும். எனவே, சிறுநீரக நோய் இருப்பவர்கள் அதிக புரதம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இதனால், கல் பிரச்சனையும் ஏற்படக்கூடும். 

எலும்புகளில் வலி ஏற்படக்கூடும். புரதத்தின் அளவு அதிகரித்தால் அது கால்சியத்தின் அளவை குறைக்கும். எனவே, தான் எலும்புகள் பலவீனமடையும். உடல் எடையை குறைக்க சிலர் புரதம் அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். எடை இழப்புக்கு பதில் எடை அதிகரிக்கக்கூடும். இது உடலுக்கு தவறான வடிவத்தை கொடுக்கும்.

எனவே புரதம் எடுத்துக் கொள்ளும் விஷயத்தில் கவனம் இருக்க வேண்டும். அதிகப்படியான புரோட்டின் எடுத்துக் கொள்வது நீர் இழப்புக்கு வழிவகை செய்யும். உடலுக்கு நிறைய தண்ணீர் தேவைப்படும் புரதம் சாப்பிடும் போது அது செரிமானமாக அதிகப்படியான தண்ணீரை எடுத்துக் கொள்கிறது. இதனால், உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high protein foods are very danger to health


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->