உடலுக்கு நன்மையை வழங்கும்., கோடைக்காலத்திற்கு உடலுக்கு உகந்த கேழ்வரகு கூழை இல்லத்திலேயே தயாரித்து சாப்பிட்டு மகிழுங்கள்.!!
how to cook in home kelvaragu kool to avoid summer season
நாம் தினமும் பொதுவாக காலை எழுந்தவுடன் குளித்து நமது உடலை புத்துணர்ச்சியாக்குவது வழக்கம். அவ்வாறு தினமும் குளிக்கும் நமக்கு பொதுவாக உடல் குளித்தல் மற்றும் தலைக்கு குளித்த என்று இரண்டு வகையாக பிரித்து குளிக்கும் பழக்கம் இருக்கும். கோடை காலத்தில் தினமும் இரண்டு வேலை குளிப்பது அவசியம்.
கோடைகாலத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் குளிப்பதன் மூலமாவும்., உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும் பழச்சாறுகள் மற்றும் பழங்களை வாங்கி உண்பதன் மூலமாகவும் நமது உடல் நலத்தை பாதுகாக்கலாம். நமது முன்னோர்களின் உணவு முறைப்படி வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய., உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும் கேழ்வரகு கூழை சமைப்பதன் மூலமாக நமது உடல் நலமானது மேலும் மேம்படும்.
கேழ்வரகு கூழ் செய்யத் தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - அரை கிலோ.,
பச்சரிசி குருணை - கால் கிலோ.,
தயிர் - தேவையான அளவு.,
வெங்காயம் - தேவையான அளவு.,
உப்பு - தேவியான அளவு.,
கேழ்வரகு கூழ் செய்யும் முறை:
எடுத்துக்கொண்ட கேழ்வரகு மாவை தண்ணீரில் முதல் நாளே ஊறவைத்து கொள்ள வேண்டும்., பின்னர் குக்கரில் சுமார் 5 லி தண்ணீரானது சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
கேழ்வரகு மாவை அடுப்பில் வைக்கும் நேரத்தில் சுமார் அரைமணி நேரம் முன்னதாக பச்சரிசி குருணையை ஊற வைத்தால் போதுமானது. கேழ்வரகு மாவனது நன்றாக கொதித்தவுடன் பச்சரிசி குருணையை சேர்த்து வேக வைக்க வேண்டும்.
இரண்டும் நன்றாக வேகும் வரை கிளறி விட்டு கொண்டு இருக்க வேண்டும் (அடிபிடிக்காமல் இருப்பதற்கு அல்லது தீயாமல் இருப்பதற்கு)., சுமார் இருப்பது நிமிடங்கள் கழித்த பின்னர் மாவனது கருப்பு மற்றும் பழுப்பு நிறத்திற்கு சென்றவுடன் மாவு வெந்ததை சோதனை செய்ய வேண்டும்.
கையை நீரில் லேசாக நனைத்து மாவை தொடும் பட்சத்தில்., மாவு கையில் ஒட்டாமல் இருந்தால் நல்லது., இப்போது அடுப்பை அனைத்துவிட்டு சுமேரியா ஐந்து நிமி. கழித்த பின்னர் குக்கரை மூடி., மறுநாள் காலையில் சிறிதளவு நீர் மற்றும் தயிர்., வெங்காயம் உப்பு சேர்த்து பருகினால் சுவையான கேழ்வரகு கூழ் தயார்.
இந்த கேழ்வரகு கூழை காரக்குழம்பு., மொச்சை கருவாட்டு குழம்பு போன்ற கார குழம்புகளை துணைக்கு வைத்து சாப்பிட்டால் அதிகளவு கூழை அருந்தலாம். இதன் மூலமாக நமது உடல் நலமும் மேம்படும்..
நன்றி: விஜயபிரியா விஜிகிட்சன்
English Summary
how to cook in home kelvaragu kool to avoid summer season