இஸ்ரேல் பிரதமருக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்..!
US President Donald Trump invites Israeli Prime Minister
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அதனை ஏற்றுக்கொண்டு பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருகின்ற பிப்ரவரி 04-ந் தேதி வெள்ளை மாளிகையில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் பதவியேற்றதற்கு பிறகு அமெரிக்கா செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு என்பது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது இஸ்ரேல் கடந்த 15 மாதங்கள் போர் தொடுத்து வந்தது. இதில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொன்று குவிக்கப்பட்டனர்.

இதனிடையே அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக காசாவில் கடந்த 19-ந் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இந்த போர் நிறுத்தத்தை தொடர வேண்டுமென அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப், இஸ்ரேல் மற்றும் ஹமாசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருவரும் சந்திக்கொள்ளவுள்ளமை உலக அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்றுபடுத்தியுள்ளது.
English Summary
US President Donald Trump invites Israeli Prime Minister