உடல் குளிர்ச்சிக்கு வெள்ளரி தண்ணீர் - இது என்ன புதுசா இருக்கு?
how to make cucumbar water
தற்போது கோடை வெயில் வட்டி வதைப்பதால், மக்கள் தங்களது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் வெள்ளரிக்காய் தண்ணீர் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
தண்ணீர்
வெள்ளரிகள்
செய்முறை:-
வெள்ளரிக்காய்களை நறுக்கி ஒரு பெரிய குடம் அல்லது ஜாடியில் சேர்த்து, பின்னர் அதில் தண்ணீரை ஊற்றி நன்கு கிளறவும்.
இந்த கலவையை குறைந்தது 4 மணிநேரம் அல்லது ஒரே இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
பின்னர் இந்த பானத்தை அப்படியே எடுத்து பருகலாம். மூன்று நாள்களுக்குள் இந்த பானத்தை குடித்து முடித்து விட வேண்டும். இப்படி செய்வதால் உடல் குளிர்ச்சியாகவே இருக்கும்.
English Summary
how to make cucumbar water